“நமது வாழ்க்கை நாம் ஒழுக்கமுடையவர்கள் என்பதால் அழகாவதில்லை. நாம் எதைச் செய்கிறோமோ அதில்  முழு மனதுடன் ஈடுபடும்போதுதான் நம் வாழ்க்கை அழகாகிறது”
சத்குரு

சத்குரு

சத்குரு, தன்னை உணர்ந்த யோகியாக, ஞானியாக, தொலைநோக்க மிக்க ஆன்மீகத் தலைவராய் திகழ்கிறார் இந்தியாவின் செல்வாக்கு மிக்க 50 மனிதர்களில் ஒருவராய் கருதப்படும் சத்குரு அவர்களின் வாழ்வும், தன்னிகரில்லா அயராத செயல்பாடுகளும், உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் உள்நிலையை ஆழமாக தொட்டுள்ளது. நமது பாரம்பரிய யோக அறிவியலை தற்கால மனங்களும் ஏற்றுக் கொள்ளும்படியாக வழங்கும் தனித்துவமான ஆற்றல் கொண்டவர் சத்குருவின் அணுகுமுறை எந்த ஒரு நம்பிக்கை முறையையும் சார்ந்ததாக இல்லை என்பதுடன், ஒருவரின் தன்னிலை மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த வழிமுறைகளை வழங்குவதாக இருக்கிறது.

சர்வதேச அளவில் மிகச் சிறந்த பேச்சாளரான சத்குரு, நியூயார்க் டைம்ஸ் பதிப்பகத்தின் 'Bestseller Inner Engineering: A Yogis Guide to Joy' புத்தகத்தின் ஆசிரியர். மேலும் உலகின் முக்கிய அமைப்புகளான ஐநா சபை மற்றும் உலக பொருளாதார அமைப்பு போன்றவற்றில் சமூக பொருளாதார முன்னேற்றம், தலைமை பண்பு மற்றும் ஆன்மீகம் என பல தலைப்புகளிலும் உரையாற்றி தீர்வுகளை வழங்கி வருகிறார். உலகின் தலைசிறந்த கல்வி மையங்களான ஹார்வார்டு, யேல், ஆக்ஸ்ஃபோர்ட், ஸ்டான்போர்ட், வார்ட்டன் மற்றும் MIT.

போன்றவற்றில் உரை நிகழ்த்த சத்குரு தொடர்ந்து அழைக்கப்படுகிறார். மனித குலத்தின் உடல், மன, ஆன்மீக நல்வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள சத்குரு, வாழ்க்கை மீது கொண்டுள்ள பார்வையாலும், வாழும் விதத்தாலும் தன்னை சந்திக்கும் அனைவருக்கும் தூண்டுதலாகவும், வியப்பூட்டுபவராகவும் இருக்கிறார்.


தனிமனித மாற்றதிற்காக செயலாற்றும் உற்திதியுடன்/3> சத்குரு 1992ம் ஆண்டு ஈஷா அறக்கட்டளையை இலாப நோக்கமின்றி, தன்னார்வத் தொண்டர்களால் இயங்கும் வகையில் நிறுவினார். உலக மக்களின் நல்வாழ்விற்காக தன்னை அர்பணித்துக் கொண்டுள்ள ஈஷா அறக்கட்டளை உலகம் முழுவதும் 300 மையங்களில் தொன்னூறு இலட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்களால் செயல்பட்டு வருகிறது. உள்நிலை மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த யோகா வகுப்புகள் மற்றும் சமுதாய பணிகளுக்கான திட்டங்கள் மூலம், மனித நல்வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் தீர்வு வழங்க ஒரு மாபெரும் இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை உருவாக்கியுள்ளது. சமுதாய மறுமலர்ச்சி, கல்வி மற்றும் சுற்றுச்சூழல் முன்னேற்றத்திற்காக சத்குரு அவர்கள் துவங்கியுள்ள பல்வேறு திட்டங்கள், லட்சக்கணக்கான மக்கள் வறுமையின் பிடியிலிருந்து வெளிவரவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி சமூகம் சார்ந்த முன்னேற்றத்தை காணவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் வேகமாக வற்றிவரும் நதிகளை காக்க, பலன் தரத்தக்க கொள்கை மாற்றங்களை (sustainable and long-term policy) கொண்டு வந்து நம் தேசத்தின் ஜீவ நதிகளுக்கு புத்துயிர் ஊட்டுவதற்காக நதிகளை மீட்போம் இயக்கம் 2017 ம் ஆண்டின் இறுதியில் சத்குருவால் துவங்கப்பட்டது. 16.2 கோடி மக்களின் ஆதரவுடன் மாபெரும் சுற்றுச்சூழல் இயக்கமாக வரலாறு காணாத சாதனை படைத்தது.

விருதுகளும் சிறப்புகளும்

பத்ம விபூஷன் விருது

இந்திய அரசு பொது மக்களின் தனித்துவமான‌ மற்றும் சிறந்த சேவையை பாராட்டி வழங்கும் உயரிய விருது, பிப்ரவரி 2017

நியூயார்க் டைம்ஸ் பதிப்பகத்தின் சிறந்த விற்பனையாளர்

Inner Engineering: A Yogi's Guide to Joy, புத்தகத்திற்காக செப்டம்பர் 2016 (தமிழில் - ஈஷா யோகா: உன்னை அறியும் விஞ்ஞானம்)

சிறப்பு ஆலோசகர் அந்தஸ்து

ஐக்கிய நாடுகள் சபையின்‌ பொருளாதார மற்றும் சமுதாய குழுவில்

இந்தியாவின் செல்வாக்கு மிக்க 50 மனிதர்களில் ஒருவர்

இந்தியா டுடே பத்திரிக்கை கருத்து கணிப்பு

இந்திரா காந்தி பரியவரன் விருது

இந்தியாவில் சுற்றுச்சூழல் பணிகளுக்கான உயரிய அங்கீகாரம்

கின்னஸ் சாதனை

பசுமை கரங்கள் இயக்கம் 3 நாட்களில் 8,00,000திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை 2,00,000திற்கும் அதிகமான தன்னார்வலர்கள் உதவியுடன் நடவு செய்து உலக சாதனை படைத்துள்ளது

இந்தியா டுடேவின் சஃபாய்கிரி (Safaigiri) விருது

பசுமைக் கரங்கள் இயக்கத்தின் பணிகளுக்காக

சமூக ஊடகங்கள்

ஊடகங்களில்