ஆராய்ச்சி

ஈஷா யோகா வகுப்பில் உலகெங்கிலும் இலட்சக்கணக்கான தியான அன்பர்கள் அர்ப்பணிப்புடன் பயிற்சி செய்யும், மிகவும் தொன்மையான ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா பயிற்சியை நேரடியாகக் கற்றுக்கொள்ளலாம். இந்தக் க்ரியாவைத் தொடர்ந்து செய்வதன் மூலம், மூளையின் செயல்பாடு, தூக்கமுறை, மனநிலையில் ஆரோக்கியம் மற்றும் உடலளவிலான நன்மை ஆகியவற்றில் ஏற்படும் பலன்களை விஞ்ஞானரீதியான ஆராய்ச்சிகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

Research Findings

ஈஷா யோகா ஆன்லைன் ஹார்வர்டு மருத்துவப்பள்ளி ஆராய்ச்சி

மன அழுத்தம் பிரச்சினை இருந்த பங்கேற்பாளர்களுக்கு , மன அழுத்தம் 50% வரைக் குறைந்துள்ளது

முடிவுகளைக் காண்க

கார்ப்பரேட் நிகழ்ச்சியின் ஆராய்ச்சி பங்குதாரர்

ரெட்கர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி

ஈஷா யோகா ஆன்லைன் ஒருவரின் சக்திநிலை, ஆனந்தம், மனநிறைவு மற்றும் பணியில் ஈடுபாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தகுந்த மேம்பாட்டினை கொண்டு வந்துள்ளது

முடிவுகளைக் காண்க

கார்ப்பரேட் நிகழ்ச்சியின் ஆராய்ச்சி பங்குதாரர்

மனம் மற்றும் உணர்வுரீதியான நன்மைகள்

ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி செய்பவர்களிடம் செய்த ஒரு ஆய்வின் படி, ஒரு வருட காலப் பயிற்சியில், மனம் மற்றும் உணர்வுரீதியாக குறிப்பிடத்தக்க பலன்களை அடைந்துள்ளனர் எனக் கண்டறியப்பட்டது. இந்தப் பயிற்சி செய்வதற்காக, வாழ்க்கை முறையில் எவ்வித மாற்றமும் கொண்டுவரத் தேவையில்லாத போதும், இந்தப் பயிற்சி மூலம், அவர்கள் அதிக அளவு கவனிக்கும் திறன், ஆனந்தம், சந்தோஷம் மற்றும் உள்நிலையில் அமைதியும் அடைந்துள்ளனர்.

A study conducted on 536 Shambhavi practitioners showed improvement in the following areas:

மனம் குவிப்புத் திறன்
77%
மனதில் தெளிவு
98%
உணர்வில் சமநிலை
92%
சக்தி நிலைகள்
84%
உற்பத்தித் திறன்
77%
உள்நிலையில் அமைதி
94%
தன்னம்பிக்கை
82%

மன அழுத்தம்

மன அழுத்தம்86% முன்னேற்றம் கண்டனர்50% மருந்தை நிறுத்தினர்28% மருந்தைக் குறைத்தனர்

பதற்றம்

பதற்றம்87% முன்னேற்றம் கண்டனர்50% மருந்தை நிறுத்தினர்25% மருந்தைக் குறைத்தனர்

மூளை அலை வடிவங்கள்

ஒரு ஆய்வில் ஷாம்பவி பயிற்சி செய்பவர்களுக்கும் செய்யாதவர்களுக்கும் ஒப்பிட்டு பார்க்கும்போது, ஷாம்பவி செய்பவர்களிடம் ஓய்வு நிலையில் உள்ள மூளை வடிவங்கள் மிகவும் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. பொதுவாக மிக ஆழமான தூக்க நிலைகளில் ஏற்படும் தரமான ஓய்வு, தளர்வு நிலை மற்றும் மறு உருவாக்க செயல் ஆகியவற்றை ஷாம்பவி வழங்குவதாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

Alpha Waves பெருக்கம்(இது விழிப்பு நிலையில் தளர்வாக இருப்பதுடன் சம்பந்தப்பட்டது)ALPHA
Beta Waves குறைவு(இது வேகமான அல்லதுபதற்றமான சிந்தனையுடன் சம்பந்தப்பட்டது)BETA
deltaDelta Waves அதிகரிப்பு(இது மிகவும் ஆழமான தூக்க நிலையுடன்சம்பந்தப்பட்டது)DELTA

ஆரோக்கிய பலன்கள்

ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி செய்த ஆய்வில், ஷாம்பவி செய்யும் 536 பேர்கள், நாட்பட்ட நோய்களான தலைவலி, ஒற்றைத்தலைவலி, ஒவ்வாமை, ஆஸ்துமா, முதுகு வலி, மாதவிடாய்க் கோளாறுகள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். தூக்கமின்மை (insomnia) உள்ளவர்களிடம், குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் இருப்பதையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நோயாளிகளில் 40% பேர் மருந்து எடுத்துக்கொள்வதைக் குறைத்துள்ளனர் அல்லது முற்றிலுமாகவும் நிறுத்தியுள்ளனர்.

தினசரிப் பயிற்சியால் முன்னேற்றமடைந்துள்ள தனிநபர்களின் சதவிகிதம்

உயர் இரத்த அழுத்தம்
67%
ஆஸ்துமா
79%
தலைவலி/ஒற்றைத்தலைவலி
90%
சர்க்கரை நோய்
71%
முதுகு/கழுத்து வலி
74%
ஜீரணக் கோளாறு
73%

உறக்க நிலை

sleepREM கால அளவுx2REMஐ அடையும் நேரம்1/3உறங்கத் துவங்கும் நேரம்1/8பயிற்சி செய்யாதவர்கள்ஷாம்பவி பயிற்சி செய்பவர்கள்

தூக்கமின்மை(Insomnia)

insomnia84% முன்னேற்றம் கண்டனர்40% மருந்தைக் குறைத்தனர்30% மருந்தை நிறுத்தினர்

மாதவிடாய்க் கோளாறு

75% பெண்களுக்கு மாதவிடாயில் பிரச்சனைகள் இருப்பதாக கருதப்படுகிறது. Poole Hospitals NHS Trust, UK, and the Indiana University School of Medicine- இந்த நிறுவனங்களைச் சேர்ந்த ஒரு குழு, ஷாம்பவி செய்யும் 128 பெண்களிடம், ஷாம்பவி பயிற்சி கற்றுக்கொள்வதற்கு முன்னும், பயிற்சிசெய்ய ஆரம்பித்து ஆறு மாதங்களுக்குப் பின்னும், மாதவிடாய் கோளாறுகள் இருப்பதைப் பற்றி ஒரு கேள்வித்தாள் கணக்கெடுப்பு எடுத்தனர்.

menstrual_before_afterபயிற்சிக்கு முன்பயிற்சிக்குப் பின்
menstrual_180% குறைந்தது-முறையில்லாத சுழற்சி63% குறைந்தது-மருத்துவத் தலையீட்டின் தேவை83% குறைந்தது-வேலைக்குறைபாடு
menstrual_257% குறைந்தது-(dysmenorrhea) மாதவிடாய் பிடிப்புகளின் தீவிர அறிகுறிகள்87% குறைந்தது- அதிக இரத்தப் போக்கில்72% குறைந்தது-மாதவிடாய் நோய்க்குறியின் உளவியல் அறிகுறிகள்

குறிப்புகள்

Maturi R et al. Survey of wellbeing in Isha Yoga practitioner. March 2010

Muralikrishnan K, Balakrishnan B, Balasubramanian K, Visnegarawla F. Measurement of the effect of Isha Yoga on cardiac autonomic nervous system using short-term heart rate variability. J Ayurveda Integr Med. April 2012.

Santhosh J, Agrawal G, Bhatia M, Nandeeshwara SB, Anand S. Spatio-Temporal EEG Spectral Analysis of Shambhavi Maha Mudra Practice in Isha Yoga.

Vinchurkar S, Telles S, Visweswaraiah NK. Impact of Long Term Meditation Practice on Sleep: A Matched Controlled Trial. International Symposium on YOGism. Dec.2010.

நீதிராஜன் TP, Maturi R, Balakrishnan B. Effect of Isha Yoga on Menstrual Disorders.