உங்களுடைய நன்கொடை எங்கு செல்கிறது?

ஒவ்வொரு தனி மனிதனும் அவருடைய ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் அழமான உள்நிலை மாற்றத்தின் வாயிலாக மேம்படுத்தத் தேவையானக் கருவிகளை பெற வேண்டும் என்பதே சத்குருவின் விருப்பமும் தொலைநோக்கு பார்வையும் ஆகும்.

சமூகம்

ஈஷா அவுட்ரீச்

உங்களைச் சுற்றியுள்ள உயிர்களை எவ்வளவு ஆழமாகத் தொடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் வாழ்க்கை வளமானதாக இருக்கும். - சத்குரு
ஈஷா அவுட்ரீச், ஈஷா அறக்கட்டளையின் சமூக நல்வாழ்விற்கான முயற்சியாகும். தனிமனிதரின் நல்வாழ்விற்காகவும் சமூகத்திற்கு புத்துயிரூட்டுவதற்காகவும் உருவாக்கப்பட்டு, தற்பொழுது வெற்றிகரமாக செயல்படும் முன் மாதிரி முயற்சியாகும்.

மேலும் அறிய

ஆரோக்கியம்

கிராம புத்துணர்வு இயக்கம்

தென்னிந்தியாவிலுள்ள 4600 கிராமங்களில் வசிக்கும் 70 லட்சம் மக்களுக்கு இலவச மருத்துவமும் சமூக மறுவாழ்வும் அளிக்கிறது.

மேலும் அறிய

கல்வி

ஈஷா வித்யா

குறைந்த கட்டணத்தில் உயர்தர கல்வி அளித்து கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட முன்னோடி இயக்கமாகும். இதுவரை 9 பள்ளிகள் நிறுவப்பட்டு, அதன் மூலம் 6,415 குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர்.

மேலும் அறிய

சுற்று சூழல்

பசுமை கரங்கள் திட்டம்

தமிழ்நாட்டின் பசுமை போர்வையை 10 சதவீதம் அதிகரிக்க, விளைநிலங்கள் பாலைவனமாக ஆகாமல் தடுக்க, மண்ணரிப்பை குறைக்க, தன்னிறைவை மீட்க, பருவநிலை மாற்றங்களை எதிர் கொள்ள மிகவும் பிரம்மாண்டமான அளவில் தொடங்கப்பட்டுள்ள காடுகள் வளர்ப்பு முயற்சியாகும்.

மேலும் அறிய

நதிகளை மீட்போம்

நதிகளை மீட்போம், பாரதத்தின் உயிர் நாடியான நதிகளை காப்பாற்றுவதற்காக உருவான இயக்கமாகும். நமது நாட்டில் ஓடும் நதிகள் மிகவும் வேகமாக வற்றிப் போகும் நிலையில் இருப்பதால், அவற்றைக் காக்க சத்குரு அவர்களால் 2017ல் துவங்கப்பட்ட இயக்கம். நதிகளின் அபாயகரமான நிலைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த சத்குரு அவர்கள் தானே வாகனத்தை செலுத்தி 16 மாநிலங்கள் வழியாக 9300 கிமீ தூரத்திற்கு பயணம் மேற்கொண்டார்.

மேலும் அறிய