ஈஷா யோகா - நிறைவு

உலகெங்கிலும் குறிப்பிட்ட சில நகரங்களில் சத்குரு அவர்களால் நேரடியாக ஈஷா யோகா நிறைவு நிகழ்ச்சி வழங்கப்படுகிறது ஈஷா யோகா ஆன்லைனில் முடித்தவர்களுக்கு , இந்த 2-நாள் நிகழ்ச்சியில் ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா சக்திவாய்ந்த மற்றும் சுத்திகரிக்கும் ஆற்றல்மிக்க 21 நிமிட செய்யக்கூடிய நுட்பமானப் பயிற்சி வழங்கப்படுகிறது. இது சுவாச பயிற்சியுடன் புத்துணர்ச்சியூட்டும் தயார்நிலை ஆசனங்களை உள்ளடக்கியது.

சத்குருவுடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு, பயிற்சி பெற்ற ஈஷா யோகா ஆசிரியர்கள் மூலம் உலகெங்கும் உள்ள குறிப்பிட்ட ஈஷா மையங்களில் ஈஷா யோகா நிறைவு நிகழ்ச்சி தொடர்ந்து நடைப்பெறும்.

நிபந்தனை: ஈஷா யோகா ஆன்லைன் முடித்திருக்க வேண்டும்

ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா

இந்த வகுப்பில் நேரடியாக வழங்கப்படும் ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா, சத்குரு இந்த நவீன உலகிற்காக வடிவமைத்து வழங்கியுள்ள, ஒரு தொன்மையான, உள்நிலை பரிமாற்றத்திற்கான சக்திவாய்ந்த 21 நிமிட யோகப் பயிற்சி உங்கள் உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் சக்திகள் ஒத்திசைவுடன் செயல்படுவதற்கும், உங்களுக்குள் ஆனந்தத்தின் இரசாயனத்தை நிலைபெறச் செய்வதற்கும் மற்றும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பும் விதமாக உருவாக்குவதற்கும் ஷாம்பவி பயிற்சி வழிசெய்கிறது.

இந்த பயிற்சி, இன்று லட்சக்கணக்கான மக்களால் ஈடுபாட்டுடன் பயிற்சி செய்யப்படுகிறது. அவர்கள் உணர்ச்சியில் கூடுதல் சமநிலை, கவனம் செலுத்துதல், ஸ்திரத் தன்மை, மற்றும் மேம்பட்ட ஆரோக்கியம் ஆகியவற்றை அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளனர்.

ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா, கண்ணெதிரே ஓர் அதிசயம்

ஷாம்பவி மஹாமுத்ரா, படைப்பின் மூலத்தைத் தொடுவதற்கான ஒரு கருவி. உங்களுள் ஆழ்ந்திருக்கும் கருப்பொருளைத் தொடும்போது, தன்னிலை மாற்றம் ஏற்படுகிறது.
- சத்குரு

நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்

வாழ்க்கையை எளிதாக வாழ்ந்திட உதவும் நடைமுறைக்கு ஏதுவான கருவிகள்

வாழ்வின் முக்கிய அம்சங்களை கையாள்வதற்கான தியானங்கள்

புத்துணர்வும் சமநிலையும் தரும் யோக பயிற்சிகள்

விழிப்புணர்வுக்கான கருவிகள்

ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா

தொடர்ந்து வழங்கப்படும் ஆதரவு மற்றும் குழுவாக இணைந்து பங்கேற்கக்கூடிய நிகழ்வுகள்

நலம் தரும் முழுமையான சைவ உணவு

புகைப்படத் தொகுப்பு

இனி வரும் நிகழ்ச்சிகள்